கலை இயக்குனர் மிலன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அண்மை தகவல் வெளியாகி இருக்கிறது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் தொடங்கி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதற்காக படத்தின் இயக்குனர் மகில் திருமேனி, நடிகர் அஜித் மற்றும் கலை இயக்குனர் மிலன் என மிக முக்கியமானவர்கள் மட்டும் சென்றனர்.

இன்றைய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கிய போது சூட்டிங் ஸ்பாட் பணியில் ஈடுபட்டபோது திடீரென கலை இயக்குனர் மிளன்  அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மிலன்  உயிரிழந்துள்ளார். அஜித்தின் ஃபேவரிட் கலை இயக்குனர் என கருதப்படுபவர் மிலன். இந்த தகவலானது தற்போது தமிழ் சினிமாவை மிகவும் துயரத்தை ஆழ்த்தி இருக்கின்றது.