கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் அஜர்பைஜான் நாட்டில் இன்று காலமானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு மிலன் சென்ற நிலையில், இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.