சமீப காலங்களாக டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூபாய் 19 கோடியை இழந்துள்ளார். அதாவது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் ஒருவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது
மறுமுனையில் தொலை தொடர்பு துறையை சேர்ந்த அதிகாரி ஜோதி விஸ்வநாத் என்ற பெயரில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அவரைத் தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் மோகன் சிங் அரசு வழக்கறிஞர் தீபக்ஷைனி மற்றும் வெங்கடேஸ்வர் என்ற பெயரில் பலர் அந்தப் பெண் மருத்துவரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதனை அடுத்து அதிகாரிகள் போல பேசிய நபர்களை நம்பிய பெண் மருத்துவர் தான் உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் என நம்பியுள்ளார். பின்னர் அவர்கள் அமலாக்க துறை அலுவலகத்தின் முத்திரைகளை பயன்படுத்திய ஆவணங்களை போலியாக காட்டி நம்ப வைத்துள்ளனர்.
அதனை நம்பிய பெண் மருத்துவர் அவரது சொத்து விவரங்கள் குறித்து அறிக்கைகளை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார் மேலும் பல்வேறு வங்கி கணக்குகளில் நகைகள் வர்த்தக பங்குகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து சுமார் ரூபாய் 19 கோடிக்கு பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
இறுதியாக ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லால்ஜி ஜெயந்தி பாய்பல் தானியா என்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த மோசடியில் கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த ஒவ்வொரு மாதமும் கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் இது போன்ற சைபர் மோசடி கும்பல்களால் இந்தியர்கள் ரூபாய் 1000 கோடியை இழந்து வருவதாக உள்துறை அமைச்சகம் அதிரடி தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
