ஜெர்மனியின் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் யூனஸ் ஸாரோ. இவர் சாகச வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது 20 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்ச் தெருவில் சாகச வீடியோ எடுக்க போவதாக இன்ஸ்டாக்ராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த அவரது பார்வையாளர்கள் பலர் பகுதியில் கூட்டமாக கூடினர். இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் யூனஸ் ஸாரோவை இதுபோன்று அனுமதி இன்றி கூட்டம் கூட்டி படம் எடுப்பது தவறு என கூறினர்.
அதனால் காவல்துறையினருக்கும் யூனஸ் ஸாராவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் யூனஸ் ஸாரோவை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் கூட்டம் கலைக்கப்பட்டது.
அதனை அடுத்து யூனஸிடம் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, பெங்களூரு மைதானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை தொடர்ந்து கூட்டம் கூட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தடையை மீறி இது போன்ற கூட்டம் கூட்டப்படுவதாக தங்களுக்கு வந்த அவசர அழைப்பின் காரணமாக விரைந்து வந்த கூட்டத்தினை தடுத்தோம் என தெரிவித்தனர்.
