பிரிட்டனில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் நள்ளிரவில் பராட்டா சமைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த தீயணைப்பு எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்வான் கபூர் என்ற அந்தப் பெண்மணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், சமையலில் இருந்து வந்த புகையினால் எச்சரிக்கை மணி சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து ஒலித்ததாகவும், அதன் விளைவாக நள்ளிரவு 11.30 மணியளவில் தீயணைப்புப் படையினர் அவரது வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
உணவில் எதுவும் கருகவில்லை என்றாலும், பிரிட்டனில் உள்ள சென்சார்கள் புகையை மிக எளிதாகக் கண்டறிந்து எச்சரிக்கை செய்வதால் இந்த தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் குளிரிலும் தனது ஒரு சாதாரண சமையல் முயற்சிக்காக தீயணைப்புத் துறையினர் வரவேண்டியிருந்தது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களை நகைச்சுவையுடன் விவரித்துள்ளார்.
