நியூயார்க் நகர மேயரின் மனைவியும் அந்நகரத்தின் முதல் பெண்மணியுமான ராமா துவாஜியின் முக பாவனைகளை தத்ரூபமாகப் பிரதிபலித்த பாகிஸ்தான் நகைச்சுவை கலைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கே கான் என்ற அந்த கலைஞர், ராமா துவாஜிக்கே உரித்தான பிரத்யேகமான பார்வை மற்றும் முக அசைவுகளை அப்படியே நகலெடுத்து வெளியிட்ட வீடியோவை, சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by K Khan (@permit.to.life)

சிரியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராமா துவாஜி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் அனிமேஷன் கலைஞர் ஆவார். நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கும் இவருக்கும் இடையிலான காதல் கதை மற்றும் ராமா துவாஜியின் தனித்துவமான ஸ்டைல் ஆகியவை ஏற்கனவே இணையத்தில் மிகவும் பிரபலம். இந்நிலையில், இந்த பாகிஸ்தான் கலைஞரின் வீடியோவைப் பார்த்த பலரும், இதில் இருப்பது உண்மையான ராமா துவாஜியா அல்லது அவரைப் போலப் பாவனை செய்யும் கலைஞரா என்று குழப்பமடையும் அளவிற்கு அவரது நடிப்பு மிகத் துல்லியமாக அமைந்துள்ளதாகப் பாராட்டி வருகின்றனர்.