SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,   முதலமைச்சர்  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்படுத்தி,  அதிலே பேசுகின்றார். சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொன்னார். 3000 பேரா தொழில் செய்வதற்கு வருகிறார்கள் ? அத்தனையும் போர்ஜெரி. அத்தனை பேர் தமிழகத்துக்கு வந்து தொழில் செய்ய வருகின்றார்களா ?

எத்தனை ஆயிரம் கோடி தொழில் முதலீட்டு ஈர்க்கப் போகிறீர்கள் ?  ஏற்கனவே உலக முதலீட்டாளர்கள்  மாநாடு என்று, ஒரு மாநாட்டை  நடத்தி…. புரிந்துணர்வு ஒப்பந்த போட்டீங்க. அதில் எவ்வளவு கோடி முதலீடு தமிழகத்திற்கு வந்திருக்கிறது ? அதனால் எத்தனை பேர் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது ? என்று வெள்ளை அறிக்கை விட முடியுமா?

மக்களை ஏமாற்றுவது கைவந்த கலை அவர்களுக்கு… அதோடு திமுக ஒரு பச்சோந்தி.  திமுகவுக்கு  தேவை அதிகாரம் தான்.  வேறு ஒண்ணுமே இல்லை. கருணாநிதி ஆட்சி செய்தார். அதற்க்கு பிறகு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார். நாட்டு மக்களை பற்றி கவலையே கிடையாது. நாட்டு மக்கள் எக்கேடு கெட்டு போனால் அவருக்கு  என்ன கவலை ? எதற்காக சொல்லுகிறேன் என்றால்,

இதை எதற்காக சொல்கின்றேன் என்றால்…. நாம் அத்தனை பேரும் தமிழகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு அரசாங்கம் சிறப்பாக இருந்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். இன்றைய  ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறால்…. அடிக்கின்ற கொள்ளையால்…. இன்றைக்கு தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிற காட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என் தெரிவித்தார்.