பிரபல சினிமா இயக்குநர் சஞ்சய் காத்வி (57) காலமானார். இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் Dhoom, Dhoom 2, விவேக் ஓபராய் நடித்த Tere Liye, Kidnap உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். அவரது மறைவிற்கு திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.