கடலூர் மாவட்டத்தில் சேத்தியத்தோப்பு பகுதியில் நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 வயது உடைய சத்தியசீலன் என்ற வாலிபர் வடலூரிலிருந்து தனது இருப்பிடமான சேத்தியாத்தோப்புக்கு இரவு வரும் வழியில் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தார்.
அதாவது இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருக்கும்போது வடிகால் கட்டுமான பணிக்காக சாலை ஓரத்தில் ஜல்லி மற்றும் மண் போடப்பட்டிருந்தது. அதே கவனிக்காமல் நிலை தடுமாறி கீழே விழுந்து மண்ணில் சிக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.