உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள லக்னோ கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளம்பெண்கள் சினிமா பாடல்களுக்கு நடுரோட்டில் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
यूपी के उन्नाव जिले में लखनऊ कानपुर हाइवे पर गदन खेड़ा के पास दो युवतियां के द्वारा भोजपुरी गाने पर डांस करने के तीन वीडियो सामने आए हैं। @NavbharatTimes pic.twitter.com/NtMekQsrbl
— NBT Uttar Pradesh (@UPNBT) January 6, 2026
அடர் மூடுபனி நிலவும் நள்ளிரவு நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில் இந்த இளம்பெண்கள் வெறும் சாதாரண உடைகளை மட்டும் அணிந்து கொண்டு சாலையில் படுத்து உருண்டு நாகினி நடனம் ஆடியதுடன் ஆபாசமான பாடல்களுக்கு ஏற்றவாறு சைகை செய்துள்ளனர்.
இணையதளங்களில் அதிக விருப்பங்களையும் பார்வைகளையும் பெறுவதற்காக அதிவேக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் போக்குவரத்து விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்ட இந்த இளம்பெண்களை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டு காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
