தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ஒரு நடிகர் என்பதைத் தாண்டி பைக் டூர், துப்பாக்கி சுடுதல் மற்றும் சிறிய வகை ஹெலிகாப்டர்கள் செய்தல் போன்ற பல விஷயங்களிலும் நடிகர் அஜித் ஆர்வமாக இருக்கிறார். நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் சென்ற நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்திற்கு பிறகு பைக் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். தற்போது இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நடிகர் அஜித் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேபாளத்தில் பைக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் பைக் சுற்றுப்பயணத்தை ஆவணப்படமாக தயாரிப்பதற்கு அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனராம். இதன் காரணமாக ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவை நடிகர் அஜித் தன்னுடன் அழைத்து சென்றுள்ளாராம். இதனால் நடிகர் அஜித்தின் பைக் டூர் சுற்றுப்பயணம் தொடர்பான ஆவணப்படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில் நடிகர் அஜித்தின் ஆவணப்படமும் வெளியானால் அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.