சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.10 மணிக்கு தொடங்கிய நிலையில் முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக 7500 வரை விற்பனையானது. இந்த நிலையில் இம்முறை 1700 முதல் 6000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை சிஎஸ்கே மற்றும் paytm இன்சைடர் ஆகிய இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.