தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் CSK மேட்ச் பார்க்க சென்னை வந்த நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்று வெளியிட்டது.

இந்த வீடியோ வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்ததால் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், அது சுனைனாவின் அடுத்த படத்திற்கான ப்ரொமோஷன் என்பது  தெரியவந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த போலீஸார் படக்குழுவை எச்சரித்து சென்றனர்.