தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”.

இந்நிலையில் நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இணைந்து சென்னையில் ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு பிரபல தியேட்டராக இருந்து பின்னர் மூடப்பட்ட அகஸ்தியா என்ற தியேட்டரை அவர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் புதிதாக மேலும் 2 தியேட்டரை நயன்தாரா கட்ட உள்ளாராம். ஏற்கனவே தயாரிப்பாளராக இருந்துவரும் நயன்தாரா டீ கடையிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.