அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் விஜயகுமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது மனைவி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார்.