கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தில் முருகேசன் (38)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால்  மன உளைச்சலில் இருந்த முருகேசன் மரகட்டா அருகே இருக்கும் விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.