உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவில் புனைபெயர்ந்த அனைவரையும் போருக்கு போக சொல்லி ரஷ்யா கட்டாயப்படுத்துவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வேர்னர் குரூப் என்ற அமைப்பு உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில் ஏராளமான தன்னார்வலர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக எதிர்த்து போர் புரிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்போது அப்படி போர் புரிய தன்னார்வலர்கள் கிடைக்காததால் மத்திய ஆசியாவை சேர்ந்த சிறை கைதிகளை வேர்னர் குழுவினர் கட்டாயப்படுத்தி உக்ரைனுக்கு எதிரான போருக்கு அனுப்புவதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவல் கேட்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.