ரஷ்யா உக்ரைன் போரானது தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இந்த போரை ரஷ்யாவில் உள்ள ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை புதின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒடுக்கி வருகின்றது. இந்த நிலையில் ரஷ்ய நாட்டில் உள்ள 20 வயதான ஒலேஸ்யா என்ற பல்கலைக்கழகம் மாணவி ஒருவர் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் ரஷ்யாவை விமர்சிக்கும் வகையில் தனது நண்பர்கள் வெளியிட்ட பதிவை பகிரவும் செய்துள்ளார்.

இதற்காக ஒலேஸ்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை வீட்டுக்காவலில் வைத்து அவரது காலில் “எலக்ட்ரானிக் டேக்”யும் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஓலேஸ்யாவின் ஒவ்வொரு அசைவுகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் ஓலேஸ்யா செல்போனில் பேசவும் இணையதளத்தை பயன்படுத்தவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்ய ஆயுத படைகளை இழிவுபடுத்தியதாகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும் கூறி அவரின் மேல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.