உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதனை எல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்த போரால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் பரஸ்பர வணிகம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு துணை மந்திரி ஆன்டரி ரூடென்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது “மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மேல் விதித்த பொருளாதாரத் தடையே இந்தியாவுடன் நாங்கள் வர்த்தகம் செய்வதற்கான ஒரு காரணியாக அமைந்தது. இரு நாடுகளும் தேசிய கரன்சிகளின் அடிப்படையில் தொகைகளை பரிமாறி கொள்வதாக முடிவு செய்தது. அதோடு போக்குவரத்து மற்றும் நிதி சார்ந்த கட்டமைப்புகளை வளர்த்துக் கொண்டது. இந்த முன்னேற்ற நிலை இனிமேல் கண்டிப்பாக தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதேபோல் இந்தியாவிற்கு எவ்வளவு எண்ணெய் தேவை உள்ளதோ அதை நாங்கள் ஏற்றுமதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.