இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மே மாதம் 6 ஆம் தேதி ராணியாக மகுடம் சூடப் போகும் ராணி கமலா பார்க்கர் தன்னுடைய மாமியார் அணிந்திருந்த கிரீடத்தை அணிய போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தை தான் கமிலா பார்க்கர் அணிய உள்ளதாக அரண்மனையை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அந்த கிரீடம் தற்போது லண்டன் டவர் கோட்டையில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கமலாவின் விருப்பத்திற்காக அந்த கிரீடம் கண்காட்சியிலிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மன்னர் சார்லஸ் அவர்களுடைய பாட்டியின் கிரீடத்தை தான் ராணி கமலா பார்க்கர் அணிவர் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. ஆனால் அவர் ராணி மேரியின் கிரீடத்தை தேர்ந்தெடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.