தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சர் ரகுபதி காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தவெக கட்சியுடன் காங்கிரஸ் திரைமறையில் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கிளம்பியுள்ள செய்திகள் அனைத்தும் வெறும் ‘கப்சா’ என்று சாடிய அவர், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்தால்தான் காங்கிரஸ் கட்சியால் சட்டசபைக்குள் நுழைய முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

திமுகவில் மட்டுமே காங்கிரஸிற்கு முறையான அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பதால், அந்தக் கட்சித் தலைமை ஒருபோதும் இந்த உறவை இழக்க விரும்பாது என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

29+2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், அமைச்சர் ரகுபதியின் இந்தச் சீற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.