தமிழக அரசியலில் தொகுதிப் பங்கீடு விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்நாட்டுப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் புள்ளியான விஷ்ணுரெட்டியை, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ரகசியமாகச் சந்தித்துப் பேசிய தகவல் தீயாய் பரவியுள்ளது.
இந்த ரகசிய ‘டீல்’ குறித்து அறிந்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் அதிரடியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திமுக கூட்டணியில் இருந்தால்தான் வெற்றி சாத்தியம் என்றும், ஒருவேளை கட்சித் தலைமை விஜய் பக்கமோ அல்லது தவெக பக்கமோ சாய நினைத்தால், தாங்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறுவோம் என்றும் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கூடாரமே தற்போது இரண்டாகப் பிளவுபட்டுத் தத்தளித்து வருகிறது.
