தமிழக அரசியலில் ஓபிஎஸ் அணிக்கு அடுத்தடுத்து பலத்த அடி விழுந்து வரும் நிலையில், தற்போது அவரது தீவிர ஆதரவாளரான செஞ்சி ஏழுமலை திடீரென எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த சில காலமாகவே ஓபிஎஸ் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவி வரும் நிலையில், செஞ்சி ஏழுமலையின் இந்த அதிரடி மாற்றம் ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையே உண்மையான அதிமுக என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், வரும் தேர்தலில் அதிமுகவின் பலத்தை நிரூபிக்க இத்தகைய இணைப்புகள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது எனச் செல்லூர் ராஜு விமர்சித்த நிலையில், தற்போது அவரது முக்கிய தளபதிகளே அணி மாறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
