திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான முடிவு அளித்ததாக கூறி ராமலிங்கம் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பிய ராமலிங்கத்தை கண்ணன் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமலிங்கம் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்ய தாமதித்ததால் ராமலிங்கம் நீதிமன்றத்தில் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.