திருச்சி மாவட்டத்தில் உள்ள இனியானூர் மேல தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பவதாரணி(14) என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் பவதாரணி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட பவதாரணியை பெற்றோர் தினமும் சோமநாதன்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளனர்.

நேற்று மருத்துவமனைக்கு பவதாரணி அழைத்து சென்றபோது அவருக்கு நரம்பு ஊசி போடப்பட்டது. இதனையடுத்து பவதாரணி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் பாதாரணி இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் பவதாரணையின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு அழுது கொண்டிருந்தனர். அப்போது திடீரென பவதாரணிக்கு லேசாக மூச்சு காற்று வந்ததாக தெரிகிறது.

இதனை பார்த்ததும் உறவினர்கள் உடனடியாக திருச்சி தென்னூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பவதாரணியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பவதாரணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மனைவி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.