கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் பூவாலை பழைய தபால் நிலைய தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பரமேஸ்வரி புத்தூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பரமேஸ்வரி அதே கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் பரமேஸ்வரி படிப்பை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் பரமேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பரமேஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகேசன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.