கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச் சாலையில் இருக்கும் கியாஸ் குடோன் அருகே கையில் கத்தி, உருட்டு கட்டையுடன் நின்று கொண்டிருக்கும் 5 பேர் வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச் சென்று 4 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ராகுல், முஸ்தபா சுல்தான், சூர்யா, முகமது உசேன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் கலியமூர்த்தி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ராகுல் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கலியமூர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர்.