செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, எந்த பொது நிறுவனமாக இருந்தாலும் சரி,  தனியார் துறையாக இருந்தாலும் சரி, சென்னைக்கு பக்கத்துல வந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு முதல்வர் அவர்கள் தமிழகத்திற்கு நல்லது செய்து கொண்டிருக்கிறார்.  தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தான் வேலைக்கு வருகிறார்கள்.  பல்வேறு படித்த இளைஞர்கள் வேலைக்கு வருகிறார்கள். எந்த தொழில் நிறுவனம் மதுரை வந்தாலும் பக்கத்தில் தூத்துக்குடி துறைமுகம் இருக்கின்றது.

மதுரையில் ஏர்போர்ட் இருக்கின்றது, தூத்துக்குடியில்  ஏர்போர்ட் இருக்கின்றது. பெரிய நிறுவனம் எதுவாக இருந்தாலும் சரி,  இனி வருகின்ற நிறுவனத்தை மதுரையை சுற்றி இருக்கின்ற மாவட்டத்திற்கு….. வேலைவாய்ப்பு மக்களுக்கு தருவதற்கு…  தொழில் நிறுவனம் அதிகமாக வர வேண்டும். மதுரையை சுற்றி இருக்கின்ற இந்த பகுதியில் தொழில்துறையை அதிகமாக வளர்க்க வேண்டும்.

மதுரை புறநகரில் இருக்கின்ற மக்கள் இதன் மூலம் பலர் அடைய வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவர் ஐயா அவர்களும்,  எங்கள் கட்சியினுடைய தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்துறை சென்னைக்கு அடுத்து அதிகமாக மதுரைக்கு வர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை,  இங்கே உள்ள  பொதுமக்களின் ஆசை.

அனைவரும் சென்னை வரும் போது அதிகம் பாப்புலேஷன் ஆகிறது. அங்க இருப்பதற்கு வசதி வாய்ப்பு இல்லை. வீடு வாடகை வேண்டுமென்றால் ? வாடகை அதிகமாகிறது. இங்கே இருந்தால் ? இங்கு படித்த இளைஞர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக்கு வருவார்கள். இதை அரசு கணிந்து….

திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கின்ற…  மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் மதுரை பக்கமும் கவனம் செலுத்த வேண்டும். 5  முறை முதலமைச்சரான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவர்களும் இங்கே கவனம் செலுத்த வேண்டும். அந்த அடிப்படையில் நிறைய தொழில் துறை நிறுவனம் வர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என தெரிவித்தார்.