தமிழக முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்றதில் இருந்தே அவரது நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. சினிமா பாணி பிஆர் (PR) உத்திகள் ஒருபக்கம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபக்கம் அவருக்குத் தலைவலியாகவும் மாறியுள்ளது. அதன் உச்சகட்டமாக, முதலமைச்சரின் தனி அறையிலேயே (CM Cabin) எடுக்கப்பட்ட ‘சினிமாடிக் ரீல்ஸ்’ வீடியோ தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
நேற்று மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் பி. சிம்மச்சந்திரன் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு, மாஸான பின்னணி இசையோடு சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக உலா வரத் தொடங்கியதும் கோட்டை அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
”முதலமைச்சர் அறை என்பது மாநிலத்தின் மிக உயரிய பாதுகாப்பு மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய இடம். அங்கே மொபைல் போனுடன் க்ளோஸ்-அப்பில் வீடியோ எடுப்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? திரைக்குப் பின்னால் இருக்கும் பிஆர் டீம் சொல்வதை மட்டும்தான் செய்கிறாரா?” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.
இந்த விவகாரத்தால் செம்ம அப்செட்டில் இருக்கும் விஜய், “நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்று சொன்னோம்; ஆனால் அது ‘ரீல்ஸ் கலாச்சாரமாக’ தரம் தாழ்ந்து விமர்சிக்கப்படுவதை ஏற்க முடியாது” என அதிகாரிகளிடம் அனல் பறந்துள்ளார். இதைத் தொடர்ந்து, இனி முதல்வர் அறைக்குள் நுழையும் எவரும் மொபைல் போன்களை வெளியிலேயே ஒப்படைக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்த தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
