முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளையொட்டி, திமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை இன்றைய இளம் தலைமுறையினர் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் கலைஞரின் சாதனைகளை விளக்கும் காணொலிகளையும் (வீடியோக்கள்) பதிவுகளையும் தாராளமாகப் பரப்ப வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞரின் தொலைநோக்குத் திட்டங்கள்தான் இன்றைய ஐடி (IT) துறை வளர்ச்சிக்கும், டிஜிட்டல் புரட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது.
உடன்பிறப்பே..! ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்குத் திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக்… pic.twitter.com/SjFrJfuO76
— DMK (@arivalayam) May 20, 2026
இந்த வரலாற்று உண்மைகளை தற்போதைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது” என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு சோசியல் மீடியா முழுவதையும் அவரது சாதனைகளால் நிரப்ப திமுகவினர் தற்போதே தயாராகி வருவதால், அரசியல் வட்டாரத்தில் இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
