செய்தியாளர்களிடம்  பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், எங்களை பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜகவை முற்றாக அரசியலில் இருந்து ஒழிச்சுக்கட்டினால் நல்லது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு உதவி செய்கிற எந்த நடவடிக்கையும் நல்ல நடவடிக்கை என தான் நான் நினைக்கின்றேன்.

அண்ணா திமுகவின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தீர்மானமாக போட்டு உள்ளார்கள். அதிகாரப்பூர்வமாக அவர்கள் தீர்மானம் வெளியிட்டு பத்திரிகையில் எல்லாம் வந்தாச்சு.

அதுக்கு மேல கூட்டணி குறித்து யார் சொல்லணும் என அவங்க தான் தீர்மானிக்க வேண்டும்.  நாங்க அந்த கட்சியினுடைய தீர்மானத்தை தான் பார்க்கிறோம். ஒரு கட்சியினுடைய தீர்மானமே வந்த பிறகு,  அது யார் சொன்னால் என்ன என்பது பெரிய முக்கியத்துவம் இல்ல.

பாஜகவை பொறுத்தவரை அவங்க நிலை குலைஞ்சி போயிருக்காங்க. அதனால தான் அண்ணாமலை ஒன்னும் பேச மாட்டேங்கிறாரு. அவர கேட்டா என்ன சொல்றாரு ? தேசிய தலைவர்கள் முடிவெடுப்பாங்கன்னு சொல்றாரு.

நான் என்ன கேட்கிறேன்…  இப்ப கூட நான் சொல்ல விரும்புவது.. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருப்பது அண்ணாமலை பேசிய பேச்சை மட்டுமே மையமாக வைத்து விலகி இருப்பது போதுமா ? என்பது தான் கேள்வி என தெரிவித்தார்.