செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உயிர் காக்கின்ற துறை…. அந்த நோயாளியுடைய சிகிச்சைக்கு…. ஏற்படுகின்ற பாதிப்புக்கு…. இந்த அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். நீண்ட விவாதங்களையும்,  நீண்ட விளக்கங்களை எல்லாம் சொல்வதை தவிர்த்து,  கள  நிலவரங்களை நீங்கள் ஆராய வேண்டும். பணி நியமனங்களை செய்ய வேண்டும். இதை தான் அரசை வலியுறுத்துகிறோம்.

அரசுக்கு நல்ல ஆலோசனையை…. நல்ல கருத்துக்களை….. இந்த ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கு…. விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு… இனிமேல் விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை…. இரண்டு ஆண்டு காலத்தில என்ன நடந்தது ? என்று எல்லாத்துக்கும் தெரியும். அதனால விமர்சனம் இல்லாமல் நடத்துவதற்கு நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறேன்.

இன்றைக்கு டெங்கு பயங்கரமா இருக்கு. டெங்கு உச்சத்தில் இருக்கிறது.  எல்லாத்துக்குமே பீவர் அண்ட் கோல்டு. நிறைய பேரு வெளில  சொல்லாம இருக்காங்க. காய்ச்சல் முகாம்கள் நடத்தணும், காய்ச்சல் கண்காணிப்பு முகாம் நடத்தணும். மொபைல் டாக்டர்கள் எங்க ? மொபைல் யூனிட் எங்க ? வீடு தேடி மருத்துவம் என சொன்னாங்க.. மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு இன்றைக்கு உரிய சிகிச்சைக்கு அளிக்க டாக்டர் இல்லையே…  இதே புதுக்கோட்டை மாவட்டத்தில்  கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து போராடறாங்க..

புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் அரசு மாவட்டத்தில் தொடர்ந்து போராடி,  இப்பதான் மருத்துவர்களை நியமன செஞ்சிருக்காங்க. இதெல்லாம் மக்கள் போராடியதற்கு பிறகு,  ஒரு அரசு குறிப்பறிந்து செயல்படுவது தான்  நல்ல  ஆட்சிக்கு அழகு. அப்படி குறிப்பறிந்து பணிகள் நடக்க வேண்டும். தட்டி கேட்டாலும் பலனில்லை.  சுட்டி காட்டினாலும் பலன் இல்லாத நிலையாக இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்தை பதிவு செய்கின்றேன் என தெரிவித்தார்.