2009 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 7ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது சாக்லேட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் இருக்கும். சாக்லேட் சாப்பிடுவது நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. ஸ்வீட் எடு கொண்டாடு என்பதற்கு ஏற்ப முக்கிய நிகழ்ச்சிகளில் சாக்லேட் கண்டிப்பாக இடம் பெறும். இன்று சாக்லேட் தினத்தை முன்னிட்டு தெரியாத சுவாரஸ்ய தகவல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

டார்க் சாக்லேட்டில் அதிக அளவு கோகோ இருக்கிறது. சாக்லேட்டில் கஃபைன் என்ற மூலப் பொருள் இருப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியான உணர்வை தூண்டுகிறது. நாள் முழுவதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும் சாக்லேட் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

சாக்லேட் உண்பதால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிப்பதோடு இதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கிறது.

தினமும் ஒரு சாக்லேட் சாப்பிடுவதால் நமது மூளையின் செயல் திறன் ஆற்றல் அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று மூலமாக தெரியவந்துள்ளது.

சாக்லேட் சாப்பிடுவதால் ஆன்டிஆக்சிடென்ட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வயது முதிர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது.

சாக்லேட் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை குறைப்பதோடு இரத்த அழுத்தத்தை குறைக்கவும் வழி செய்கிறது.

சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க அவை தரமானதுதானா என்பதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.