ஒவ்வொரு வருடமும் ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11 இல் தான் உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது இதை நினைவு கூற தான் ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக ஐநா சபை அறிவித்தது. உலக மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா சுமார் 8 பில்லியன். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 142.8கோடி. வளர்ந்த நாடான சீனாவிற்கும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்கும் மக்கள் தொகை பெருக்கம் மிகுந்த சவாலாக உள்ளது.

சீனாவில் சுமார் 142.5 கோடி மக்கள் இருக்கும் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகையோ சுமார் 34 கோடி தான். சில நாடுகளில் மக்கள் தொகையை குறைப்பதற்கும் சில நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கவும் அரசாங்கங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ல் எடுக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 16 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கடைசியாக பதினாறாவது  மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டது இதன் ஆணையராக செயல்பட்டவர் திரு விவேக் ஜோசி அவர்கள். இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகமாக இருப்பதால் அது நமது பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இதனால் வறுமை ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது.