ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி தேசிய மாணவர் தினம் கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமான மாணவர் செயல்பாட்டிற்காக 1948 ஆம் ஆண்டு அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு துவங்கப்பட்டது. ஆனால் 1949 ஆம் ஆண்டுதான் இந்த அமைப்பு முறையாக பதிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பு நிறுவப்பட்ட தினம்  தான் தேசிய மாணவர் தினமாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திரம் கிடைத்த பிறகு நவீன தேசத்தை உருவாக்க நம் நாடு கனவு கண்டது. அதனை நினைவாக்க இளைஞர்கள் நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களை மையமாக வைத்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் இயக்கத்தை துவங்கினர். 1958 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த யஸ்வந்த் ராவ் என்ற பேராசிரியர் இந்த இயக்கத்தில் சேர்ந்த பிறகு அமைப்பின் செயல்பாடுகளை அதிகரித்து நாடு முழுவதும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் பற்றி தெரிய வந்தது.