திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியில் மாயாண்டி ஜோசப் என்ற 60 வயது நபர் வசித்து வருகிறார். இவர் மதுபான பார் நடத்தி வரும் நிலையில் இவருடைய மனைவி நிர்மலா அடியனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியாவார். சில வருடங்களுக்கு முன்பு இவர் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் யாகப்பன்பட்டியில் உள்ள பார் அருகே மர்ம நபர்களால் நேற்று இரவு மாயாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அதிமுக ஆட்சியின் போது அந்த கட்சியில் பொறுப்பு வகித்த மாயாண்டி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவில் இணைந்து கொண்டார். மணல் மற்றும் மதுபான விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த இவர் தொழில் போட்டி காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.