கடலூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வழக்கம்போல சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஆம்புலன்ஸ்சில் நோயாளி ஒருவரை உள்ளே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் அங்கேவெளியே  நின்றுள்ளது. அப்பொழுது அங்கு இருந்து சிறுவன் ஆம்புலன்ஸில் ஏறி வாகனத்தை இயக்கியுள்ளார்.

அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றதால் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர் .இதனையடுத்து அந்த இண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.