சமீப காலங்களாக தெரு நாய்கள் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அதிகமாகி வருகின்றன.
அதேபோன்று கேரளாவில் கூட்டமாக தெரு நாய்கள் சிறுவர் சிறுமிகளை தாக்க வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருவில் குழந்தைகள் சைக்கிள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
கேரளாவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை கூட்டமாக தாக்க வந்த தெருநாய்கள். சாமர்த்தியமாக செயல்பட்டதால் நூல் இழையில் தப்பிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.#DogAttack #Kerala #StrayDogs #Pattambi #AnimalAttack #ViralVideo #CCTV #ChildrenSafety pic.twitter.com/ldHw3ztW7J
— PttvOnlinenews (@PttvNewsX) August 23, 2025
அச்சமயத்தில் தெரு நாய் கூட்டம் ஒன்று வேகமாக குழந்தைகளை தாக்குவதற்கு வருகிறது. ஆனால் குழந்தைகள் பதட்டப்படாமல் சாமர்த்தியமாக சைக்கிளைத் தெருவிலே விட்டுவிட்டு வேகமாக வீட்டிற்குள் கதவை அடைத்துக் கொண்டு தப்பித்து விடுகின்றனர்.
நூலிலையில் சிறுவர், சிறுமிகள் எந்தவித காயமும் இன்றி தப்பித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இச்சம்பவம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதை எடுத்துக்காட்டி உள்ளது.
