சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தூய்மை பணிகள் மேற்கொள்ளும்போது, சுமார் 569.28 கிலோ மீட்டர் நீளமுள்ள 501 எண்ணிக்கையிலான பஸ்கள் செல்லும் சாலைகள் மற்றும் இதர முக்கிய சாலைகளில் பேட்டரியால் இயங்கும் 633 வாகனங்கள் மற்றும் 10 டிப்பர் லாரிகள் வைத்து இந்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2,187 தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இரவு நேர தூய்மை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே இந்த தூய்மை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் உயர் அலுவலர்களை சுழற்சி முறையில் நியமித்து, பணிகளை நடைபெறுவதை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.