திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி கொண்டிருந்ததை பார்த்து ராஜேந்திரன் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.