ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்யும் சார்ஜர்களை தயாரிக்கும் முயற்சியில் ரெட்மி களம் இறங்கியுள்ளது. ரியல் மீ நிறுவனம் 10 நிமிடத்தில் சார்ஜ் செய்யும் சக்தி வாய்ந்த சார்ஜர்களை தயாரித்து வருகிறது. 4600 MAH பேட்டரி திறன் கொண்ட ரியல் மி போன்களை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் சார்ஜர் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் ரியல் மீ நிறுவனத்திற்கு போட்டியாக ரெட்மி நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஐந்து நிமிடத்தில் சார்ஜ் செய்யும் சார்ஜர்களை தயாரிக்கும் முயற்சியில் ரெட்மி இறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரியல் மீ  மிஞ்சும் வகையில் 4,500 MAH பேட்டரி திறன் கொண்ட ரெட் மி ஃபோன்களை சார்ஜ் செய்ய 300 வாட்ஸ் சார்ஜர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.