கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தூண்களை தட்டினால் சரிகமப ஓசை…! “6 முகங்களும் 12 கைகளும் கொண்ட முருகப்பெருமான்”… நெல்லுக்கு வேலியாக காவல் காத்த தெய்வம்… நெல்லையப்பர் கோவில் பற்றி பலரும் அறியா தகவல்..!
தென்னகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய ஸ்தலங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் அடிஎடுத்து வைக்கும் பக்தர்களுக்கு, அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையும், ஆன்மீக…
Read more“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…
Read more