பெண்களுக்கும் பொருளாதாரம் சார்ந்த அதிகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்பதி திதி யோஜனாவை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதற்காகவும், பெண்களின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் வட்டி இல்லாத கடனாக வழங்கப்படுகிறது.
இதனை பெண்கள் பயன்படுத்துவதற்கு முதலில் கிராமப்புறங்களில் செயல்படும் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக கட்டாயம் இருக்க வேண்டும். அதன் பின் தொழில் தொடங்குவதற்கான பொருளாதார திட்டத்தினை தெளிவாக அரசு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் பரிசீலனை செய்து அங்கீகரித்த பின்னரே ரூபாய் 5 லட்சம் கடனாக வழங்கப்படும்.