பஞ்சாபில் கடந்த 2017 வரை சிரோமணி அகாலி தள ஆட்சியின் நடைபெற்றது. இந்த அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம், அக்கட்சியினருக்கு மத முறைப்படி தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையின் பெயர் தன்கா. இதன்படி அம்ரிஸ்தரில் பொற்கோயிலில் சேவாதார் ஆக வேலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த தண்டனை தொடங்கப்பட்டது. இதை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடை அணிந்து பொற்கோயிலின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரது கழுத்தில் தண்டனை அட்டை தொங்கியது. அதோடு கையில் ஈட்டியோடு கோவிலிருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.

அவருடன் ஆதரவாளர்கள் பலரும் இருந்தனர். அகாலி தளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா பொற்கோயிலில் உள்ள பாத்திரங்களை கழுவி தனது தண்டனையை நிறைவேற்றினார். இந்நிலையில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அதாவது சர்க்கரை நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை அருகில் ஒரு நபர் நெருங்கினார். அப்போது தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர்கள் ஓடிச் சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் அவர் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.