தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அவர் இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் வைக்கம் போராட்டம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த போராட்டத்தை பெரியார் ஒன்றரை ஆண்டுகள் நடத்தினார். இதனால் பெரியாரை வைக்கம் வீரர் என்று தமிழ் தென்றல் திருவிக பாராட்டினார். வைக்கம் போராட்ட நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விழா இந்த வருடம் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஒரு வருடம் நடைபெறும். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வைக்கம் போராட்டத்தின் நோக்கத்தையும், வரலாற்றையும் வெற்றியையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார்