கடந்த மார்ச் 22ஆம் தேதி வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்த பெண்ணை, சிலர் வீடியோ பதிவு செய்ததோடு ஹிஜாபை அகற்ற சொன்னதாக போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலனுடன் வேலூரில் கோட்டையை சுற்றிப்பார்க்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாபை அகற்ற சொல்லி, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இதில் சம்பந்தப்பட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த 7 பேரும் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.