புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்ம், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் காவிரி பிரச்சனைக்கு தற்போது வரை தீர்வு கிடைக்காதது யாருடைய தவறு..? கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு,  கூட்டணி உறவாடிய நம் மாநில முதலமைச்சர் கூட இப்ப பிரச்சனையை தீர்க்க முடியவில்லையா ? காவிரி நீர் உரிமைக்காக போராடும் நம் மாநில மக்களின் மீது காவல்துறையை ஏவி நடவடிக்கை மேற்கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனையில் தீர்வு காணாமல் வாழ்வாதாரத்தின் முக்கியமான அங்கம் வகிக்கும் நீரினை வைத்து அரசியல் செய்வதை மக்கள் ஏற்பார்களா? இப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.அதிமுக ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தந்த உரிமையை கூட தற்போதைய அரசாங்கத்தால் பாதுகாக்க முடியவில்லையா..?

கூட்டணி என்ற பெயரால் காங்கிரசுடன் உறவு பேணும் திமுக அரசு,  கர்நாடகாவில் ஆட்சி புரியும் காங்கிரஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி நம் மாநிலத்திற்கு தேவையான நீரை பெற்று தர முடியாதா ?  தமிழ் மக்களுக்கு எதிராக கர்நாடகத்தில் கொடுக்கப்படும் வன்மங்களை நிறுத்த அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிமித்தமாக கர்நாடகாவில் தங்கி பணிபுரியும் தமிழ் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு தற்காலிகமாக தீர்வு எதையும் காணாமல் நிரந்தர தீர்வு காண இரு அரசுகளும் முன்வர வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்துகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ் மொழியின் உன்னதமான கூற்று அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானது என்பதை கர்நாடக மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.