நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறையில போட்டவுடன்….  சீமான் சினிமா எடுத்த சின்ன பைய பயந்துக்குவான்… எங்க அண்ணன் திருச்சி சிவா தான் சொல்லுவார்…  டேய் நீ என்ன நோக்கத்திற்காக சிறை போனியோ,  அதே  நோக்கத்தோடு வெளியே  வந்தடா. திருப்பி என்ன நோக்கத்திற்காக சிறை போனியோ அதே நோக்கத்தோடு வெளியே வந்த டா. உன்னை ஜெயிலில் போட்டவர்  பயந்துட்டார் டா….

ஏன்டா…  கற்பழிப்பு வழக்கில் உள்ளே போனவனே ஹாய் என கைய காட்டுறான்.  நான் எதுக்கு டா பயப்படணும் ? கொலை செய்றவன், கொள்ளை அடிக்கிறவன், முடிச்சவிக்கித்தனம் – மொள்ளமாரித்தனம் செய்றவன்,  அடுத்தவன் சொத்தை திருடி கலவாங்குறவன், ஊழல் செய்றவன், ஊரான் சொத்தை ஆக்கிரமிக்கிறவன்…. இந்த பயலே பயப்படாம திரிறான். நான் நல்லவன்.  நான் எதுக்கு பயப்படணும் ?

தம்பி தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா ? நீ கேட்டுகிட்டே இரு தம்பி…  தமிழ் படித்தால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும். அந்த நிலையை நான் உருவாக்குவேன். அதற்காகவாவது மலர வேண்டும் நாம் தமிழர் ஆட்சி.  சும்மா எதோ மொழி, மொழி என பேசிட்டு இருக்காரே…..  ஏன்டா உனக்கு அதிகாரம் வந்த உடனே நீ சமஸ்கிருதம் படி என சொல்லுற..

உனக்கு அதிகாரம் வந்த உடனே எல்லாரையும் ஹிந்தி படிங்குறில.. ஹிந்தி நா படிக்கிறேன்,  எதுக்கு ? வட இந்தியாவில் வந்து சோன்பப்படி விக்கவா.. அப்போ என்ன இதுக்கு நீ….  இங்க வந்து சோன்பப்படி, ஷோட்டரு விக்கிற. பூரா பயலும் பான்பிராக் தின்னுகிட்டு,  போர்வை வித்துக்கிட்டு இங்க திரிறான். ஒன்றரை கோடி பேரு என் ஊரு திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர்ல ஏறிட்டியே எதுக்கு? எவ்வழியே வந்தார்களோ,  அவ்வழியே திரும்பி சென்றார்கள் என்ற வரலாறு எழுத படும்.  நாம் தமிழர் ஆட்சி மலரும் போது என தெரிவித்தார்.