கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே நந்தனார் கோவில் வழிபட்ட பின் நடந்த  நிகழ்ச்சியில் சனாதனம் குறித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை. நாம் அனைவரும் ஒன்றே என உள்ளது.அனைவரது மனங்களிலும் கடவுள் குடியிருக்கும் போது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எப்படி இருக்க முடியும் ? வயல்களில் உள்ள கலைகளை அகற்ற வேண்டும் எனமே தவிர,  நெல் பயிர்களை அகற்றக்கூடாது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது.  குடிநீரில் மனிதக் கழிவு,  மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியயலின பஞ்சாயத்து தலைவர் இந்துமதியை பதவி ஏற்க விடாமல் செய்கின்றனர். சமூக நீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் சமூக இழிவு நிலை தான் தொடர்கிறது. நம்முடைய மதத்தில் உள்ள இந்த பிரிவினைவாதத்தை நாம் மறந்து விட்டோம் என தெரிவித்தார்.