தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதல் ஆளும் அரசு திமுகவுக்கும் –  ஆளுநர் ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. தமிழக அரசின் குறைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்,  விமர்சனம் செய்து வருகிறார். இதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கண்டித்து வந்தாலும்,  ஆளுநர் ரவி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இது போல பேசி வருகிறார்.

அந்த வகையில் இன்று காட்டுமன்னார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை. நாம் அனைவரும் ஒன்றே என உள்ளது.அனைவரது மனங்களிலும் கடவுள் குடியிருக்கும் போது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எப்படி இருக்க முடியும் ? வயல்களில் உள்ள கலைகளை அகற்ற வேண்டும் எனமே தவிர,  நெல் பயிர்களை அகற்றக்கூடாது. நம்முடைய மதத்தில் உள்ள இந்த பிரிவினைவாதத்தை நாம் மறந்து விட்டோம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது.  குடிநீரில் மனிதக் கழிவு,  மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியயலின பஞ்சாயத்து தலைவர் இந்துமதியை பதவி ஏற்க விடாமல் செய்கின்றனர். சமூக நீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் சமூக இழிவு நிலை தான் தொடர்கிறது என தெரிவித்தார்.